ராமநாதபுரம் ஜூன், 9
கடல் ஓரத்தில் இருப்பதால் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை கொடுக்காமல் அதை காரணம் காட்டி இழுத்தடிக்கிறது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்.
மாணவர்களின் மீது அக்கறை இல்லாத சூழல் நிலவி வரும் நிலையில்,இப்பொழுது ஏன் மரைக்காயர்பட்டினம் கடலோரத்தில் அங்கன்வாடியை கட்டுவதற்கு விரைவு காட்டுகிறீர்கள்?
உண்மையில் மாணவர்களின் நலனில் அக்கறை உள்ளதா? அல்லது corruption commission இருக்கா? என்பதை மக்கள் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல பள்ளிகள் அனுமதி கோரியும் இன்னும் அங்கீகாரம் கொடுக்கவில்லை ஆனால் இங்கு விரைவாக வேலைகள் நடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மரைக்காயர்பட்டினம் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையம் கடலில் இருந்து 100 மீட்டர் தூர தொலைவில் அமைந்துள்ளதால் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு அம்சம் குறித்து பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்.
கல்வி விசயத்தில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடாய் செயல்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்