நாமக்கல் அக், 29
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, சுய தொழில், வங்கிக் கடன் உதவி, முதியோர் ஓய்வூதியம் மற்றும் வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 கோரிக்கை மனுக்களை சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆட்சியர் ஸ்ரேயாசிங்கிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தேவிகா ராணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.