Category: பொது

சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்.

கடலூர் செப், 27 சிறுபாக்கம்‌ அடுத்த கொளவாய் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊாாட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது…

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.

கோயம்புத்தூர் செப், 24 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கேரளாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு…

பள்ளிபாளையத்தில் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாமக்கல் செப், 21 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு நகர் பெரும்பாறை பகுதியில் சேகர் (வயது 44) என்பவர் பழைய நூல் குடோன் நடத்தி வருகிறார். இங்கு விசைத்தறி கூடங்களில் இருந்து பெறப்படும் நூல்கள், ஆயில்கள், பாட்டில்கள், இரும்பு பொருட்கள் வாங்கி…

பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்.

நெல்லை செப், 20 நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் குட்கா கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து…

ஏர் இந்தியா பெயர் மாற்றம்.

மும்பை செப், 15 ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியாவை எப்படியெல்லாம் முன்னேற்றுவது என்பது குறித்து டாடா குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர் இந்தியாவை உலகத்தரம்…

துவாரகா சங்கராச்சாரியார் மரணம். பிரதமர் மோடி இரங்கல்.

போபால் செப், 12 மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98. நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது அவரைச் சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர்.…

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை.

நாகர்கோவில் செப், 10 கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 5 தினங்கள் வரை இந்த மழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக,…

ராகுல்காந்தியின் நடைபயணத்தில் திரண்ட பொதுமக்கள்.

நாகர்கோவில் செப், 8 ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரை தொடங்கினார். அவர் பாதயாத்திரை தொடங்கியதும் மிக வேகமாகவும், துரிதமாகவும் நடக்க தொடங்கினார். முதல் ஒரு மணி நேரத்தில் 3 ½…

ஆய்வுக்கு சென்ற ஆட்சியரை முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் முற்றுகை.

வேலூர் செப், 7 கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் துணை சுகாதார நிலைய வளாகத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியரே ஒரு சிலரை அழைத்து கேட்டார். கீழ் விலாச்சூர்…

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி

ஈரோடு செப், 4 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை…