நாகர்கோவில் செப், 8
ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரை தொடங்கினார்.
அவர் பாதயாத்திரை தொடங்கியதும் மிக வேகமாகவும், துரிதமாகவும் நடக்க தொடங்கினார். முதல் ஒரு மணி நேரத்தில் 3 ½ கிலோமீட்டர் தூரம் கடந்து 8.15 மணிக்கு கொட்டாரம் வந்தடைந்தார். கொட்டாரத்தில் சாலையின் இருபுறமும் நின்று தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
மேலும் ராகுல் காந்தியை காண ஏராளமான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சாலையின் ஓரமாக திரண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து ராகுல் காந்தி கையசைத்தார். பொதுமக்கள் பலரும் ராகுல் காந்தியுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதுபோல மூதாட்டிகளும் சாலையில் திரண்டு நின்று ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து ராகுல் கையசைத்தபடி சென்றார். சிலரின் அருகில் சென்று அவர்களின் கைகளை பிடித்து அன்புடன் பேசினார்.