Category: மாவட்ட செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

சென்னை செப், 4 ஓணம் பண்டிகை வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி…

மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் செப், 4 பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்…

குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை. மாநகர காவல் ஆணையர் உத்தரவு.

கோயம்புத்தூர் செப், 4 கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குறும்புத்தனமான வீடியோக்கள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள்,…

முதல்வரின் காலை உணவு திட்டம் ஆலோசனை கூட்டம்.

தர்மபுரி செப், 4 “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டம்.

அரியலூர் செப், 4 அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு…

ஆழ்கடல் பகுதியில் இருந்து படகுடன் மீட்கப்பட்ட மீனவர்கள்.

ராமேசுவரம் செப், 4 ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனை சேர்ந்த அசிசியான் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றில் கேரள மாநிலம் கொச்சி துறைமுக பகுதியில் இருந்து கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு…

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கப்பணிகள், தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.

சென்னை செப், 4 சென்னை மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.…

நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா.

நெல்லை செப், 3 கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவில் வாசல் முன் நின்று சுவாமியை அழைத்தார். ஆனால் நெல்லையப்பர் காட்சி கொடுக்காததால் கோபம் அடைந்த சித்தர் வடக்கு நோக்கி பயணித்தார்.பின்னர் மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அப்போது தாமதமாக…

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. துணை இயக்குனர் எச்சரிக்கை.

நெல்லை செப், 3 நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத…

நெகிழி இல்லாத நெல்லையை உருவாக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய சைக்கிள் பேரணி

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. வி.கே.புரம் பகுதியில் உள்ள ஆசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 100 -க்கும்…