தர்மபுரி செப், 4
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சாந்தி தலைமையில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.