அரியலூர் செப், 4
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர். அவர்கள் மருத்துவ சீட்டுகளை பெற்று, மருத்துவரிடம் சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்காமல், வேறு மருத்துவர் வந்ததும் காண்பித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் பொறுமை இழந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் முன்பு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். உடனே தகவல் அறிந்த துணை ஆய்வாளர்கள் நிக்கோலஸ், ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்