கோயம்புத்தூர் செப், 4
கோவையில் பொது இடங்களில் குறும்புத்தனமான (பிராங்க்) வீடியோ எடுக்க தடை விதித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
குறும்புத்தனமான வீடியோக்கள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடைபயிற்சி மைதாங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் (பிராங்க் வீடியோ) தங்களுக்கு என்று யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.
மேலும் குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள், நடைபயிற்சிக்கு மைதானங்களுக்கு செல்வோர், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு இடையே மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன எனவே அத்தகைய வீடியோக்களை எடுக்கக் கூடாது. என குறிப்பிட்டுள்ளார்.