Spread the love

கோயம்புத்தூர் செப், 5

கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். ராணுவ பணிக்கு தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் நடந்தது.

இதனைக் கண்காணிக்க ஆட்சியர் சமீரன் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள், தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் என ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையில் தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் 9 போ், அறை கண்காணிப்பாளா்கள் 78 போ் ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *