சென்னை செப், 4
ஓணம் பண்டிகை வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு 8ம்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.