Category: மாவட்ட செய்திகள்

தக்கலை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கன்னியாகுமரி அக், 21 தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார்…

கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி அக், 21 ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுந்தரேஷபுரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலம் தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் அமைந்துள்ள…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். நெல்லை உதவி ஆணையர்- 3 காவலர்கள் இடைநீக்கம்.

நெல்லை அக், 21 தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த…

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வணிகர் சங்க பேரமைப்பினர் வேண்டுகோள்.

திண்டுக்கல் அக், 21 பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை தாங்கினார். தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆலோசகர்கள் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர்…

நகராட்சியில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை. நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்.

தர்மபுரி அக், 21 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர்…

களைகட்டியது தீபாவளி பண்டிகை. அலைமோதிய மக்கள் கூட்டம்.

கடலூர் அக், 21 இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டும்,பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது…

ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் அக், 21 பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் நூர்ஜகான் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.…

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்.

செங்கல்பட்டு அக், 21 நடிகர் சூர்யாவின் பண்ணை வீடு மற்றும் ஸ்டூடியோ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ளது. அண்மையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற வள்ளி எட்டியப்பன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில்…

காலை உணவின் தரம் குறித்து செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

அரியலூர் அக், 21 ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 189 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர். நேற்று காலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவான உப்புமா, சாம்பார் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ-…

நாட்டறம்பள்ளி மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் அக், 21 நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் உள்ள சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களுக்கு…