தர்மபுரி அக், 21
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார். நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், கணக்கு அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 700 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைப்பது, அன்னசாகரத்தில் 50 பெண்கள், 50 ஆண்கள் என வீடற்றோர் தங்குவதற்கு ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டுவது என்பன உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. பின்னர் அந்த திட்டங்களை நிறைவேற்ற நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.