கோயம்புத்தூர் அக், 21
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் நூர்ஜகான் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
இவ்விழாவில் 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனங்களை ஓட்ட கூடாது. வாகனங்களுக்கான சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் தவறாமல் வைத்திருக்க வேண்டும். சீல் பெட் அணியாமல் கார் ஓட்ட கூடாது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியப்படி பேரணியாக சென்றனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.