கோயம்புத்தூர் அக், 20
உலக உணவு தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்ற தலைப்புகளில் பல்வேறு வகையான உணவு பெருட்களை மாணவ-மாணவிகள் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். கண்காட்சியை ஊர்பொதுமக்கள், பெற்றோர்களும் கண்டு ரசித்தனர். மேலும் உண்ணும் உணவை நமக்கு அளித்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மகாலட்சுமி, உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.