கோயம்புத்தூர் அக், 22
லடாக் ஹாட் ஸ்பிரிங்க் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ம்தேதி திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 20 பேர் இறந்தனர். இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நினைவு தூண் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி, மாநகர காவல் துணை ஆணையாளர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உதவி ஆணையர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.