Author: Seyed Sulthan Ibrahim

பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 21 இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல்…

கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப், 21 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர்…

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை செப், 21 மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை செப், 21 மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள…

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சாயல்குடி செப், 21 ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய…

அம்பை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம்-. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

நெல்லை செப், 21 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கலையரசி ( வயது 47). இவர் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வேலைக்காக சென்றார். அப்போது…

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

காஞ்சிபுரம் செப், 21 காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பேரமணல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தமிழ்நாடு நுகர்பொருள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து.

சென்னை செப், 21 மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில்…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா.

விழுப்புரம்‌ செப், 21 புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர்…

பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்.

விருதுநகர் செப், 21 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்க பாண்டியன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில்…