திருவண்ணாமலை செப், 21
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் கம்பன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆட்சியர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன், ஆறுமுகம், குட்டி புகழேந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.