திருவண்ணாமலை செப், 25
கண்ணமங்கலம் அருகே வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை தாங்கினார். வாழியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலய மருத்துவர் ஓம்காரமூர்த்தி வரவேற்றார். களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் திட்ட விளக்கவுரையாற்றினார். இதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இம்முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஷ், சந்தவாசல் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சசிகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்தவாசல் சுகாதார ஆய்வாளர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.