காஞ்சிபுரம் செப், 21
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பேரமணல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியபதி தேவி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்