Author: Mansoor_vbns

கடல் குதிரை விற்க முயன்றவர் கைது.

புதுக்கோட்டை டிச, 17 அறந்தாங்கி அருகே கடலோர பகுதியில் வனசரகர் மேகலா தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி கடற்கரையில் சந்தேகப்படும்படியாக நின்ற முதியவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.…

பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

நீலகிரி டிச, 17 பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர்…

குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை டிச, 17 பெரம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் ஆகியோர்…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த12 கடைகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி டிச, 17 சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23 ம் தேதி புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 17 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23 ம்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100…

தீவன பயிர் வளர்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கடலூர் டிச, 17 விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமனூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 11 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் மீட்டு அதில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு…

ராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

ராமநாதபுரம் டிச, 17 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ராமநாதபுரம், கீழக்கரை, ஆகிய நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்எஸ் மங்கலம் ஆகிய பேரூராட்சிகள், ராமநாதபுரம் திருப்புல்லாணி, பரமக்குடி உள்ளிட்ட…

புதினிடம் வலியுறுத்திய மோடி.

புதுடெல்லி டிச, 17 உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் மோடி வலியுறுத்துள்ளார். தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பேசிய அவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 17 தர்மபுரி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகலப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி,…

கார்கள் விலை கிடுகிடுவென உயர்வு.

சென்னை டிச, 17 ஹோண்டா நிறுவனம் கார்களின் விலையை 30 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் உள்ளீடு பொருட்களின் விலையும், புதிய விதிமுறைகள் காரணமாகவும்…