புதுக்கோட்டை டிச, 17
அறந்தாங்கி அருகே கடலோர பகுதியில் வனசரகர் மேகலா தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி கடற்கரையில் சந்தேகப்படும்படியாக நின்ற முதியவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகப்பட்டு அவரை சோதனை செய்த போது, அவர் கையில் இருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட 21 கடல் குதிரை ஒரு கடல் அட்டை இருந்ததை பார்த்து அவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போது கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பதும், இவர் இதனை விற்க வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து பணியில் வன சரகர் மேகலா தலைமையில் சோணமுத்து அன்புமணி முத்துராமன் உள்ளிட்டோர் சென்றனர்.