மயிலாடுதுறை டிச, 17
பெரம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா சட்ட மன்ற உறுப்பினர் முருகன் கலந்துகொண்டு பேசினார்.
இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், மாநில விவசாய அணி இணை செயலாளர் அருட்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சித்திக், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கலந்து கொண்டனர்.