தர்மபுரி டிச, 17
தர்மபுரி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகலப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி ஷகீலா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
