புதுடெல்லி டிச, 17
உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் மோடி வலியுறுத்துள்ளார். தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பேசிய அவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செயல் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் போர் தீர்வு கிடையாது என்று உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார்.