ராமநாதபுரம் டிச, 17
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ராமநாதபுரம், கீழக்கரை, ஆகிய நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்எஸ் மங்கலம் ஆகிய பேரூராட்சிகள், ராமநாதபுரம் திருப்புல்லாணி, பரமக்குடி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 236 ஊரக குடியிருப்பில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து ராமநாதபுரம் மக்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.