ராமநாதபுரம் டிச, 16
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிறுவனர் அமைச்சர் நீல லோகிதாசன் தலைமையில், தேசிய பொதுச்செயலாளர் ஜான் குமார் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் துவக்க உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான், கேரளா வனத்துறை அமைச்சர் சசீந்திரன் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியாவின் தலைவர் நற்றமிழ்செல்வன், துணைத் தலைவர் சுந்தரம் (அப்பா மெடிக்கல்) செயலாளர் குகன் இணை செயலாளர் அப்துல் பாசித் ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர் , சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பு வரவேற்றுள்ளது.