சென்னை டிச, 17
ஹோண்டா நிறுவனம் கார்களின் விலையை 30 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் உள்ளீடு பொருட்களின் விலையும், புதிய விதிமுறைகள் காரணமாகவும் விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலை உயர்வு இருக்கும் என கூறியுள்ளது. இதே போல் மற்ற கார் நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்த உள்ளன.