நாகர்கோவில் நவ, 6
மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தல் மற்றும் கழிவு நீர் ஓடை சுத்தம் செய்தல் பணிக்கு எந்திரம் பயன்படுத்த ஆய்வு பணி இன்று நடந்தது. தனியார் நிறுவனம் மூலம் அதற்கான செய்முறை விளக்கம் நடந்தது.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், சுகாதார அலுவலர் ராம் மோகன், பொது சுகாதார குழு தலைவர் கலா ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.