கன்னியாகுமரி நவ, 4
நாகர்கோவிலில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.