கன்னியாகுமரி நவ, 8
நாகர்கோவில் மாநகர திமுக. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம், பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.