விருதுநகர் அக், 6
சமுதாய வளைகாப்பு திருச்சுழியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குனர் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.