விருதுநகர் அக், 5
அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றார். சட்ட மன்ற தலைவர் சிவகாசி அசோகன், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கல்யாண்குமார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனங்களை வழங்கியும், ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 143 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.