மொகாலி செப், 20
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வெறும் 6 நாட்களில் முடிந்து விடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்