நாகர்கோவில் செப், 4
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.