Spread the love

கன்னியாகுமரி செப், 4

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964 ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.

மேலும் 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி 1970ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 1970ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ம் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த மண்ட பம் நிறுவி 51 ஆண்டுகள் நிறைவடைந்து 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய 52வது ஆண்டு விழா விவேகானந்தர் பாறையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய ஜார்க்கண்ட மாநிலம் ஜாம்செட்பூைரை சேர்ந்த சுற்றுலாப் பயணியான பாசு டியோ கவுர் என்பவருக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *