பாரிஸ் ஆக, 10
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார். அரையிறுதியில் முடிவில் 61.5 கிலோவாக இருந்த அமன் இறுதிப் போட்டியின் போது 56.9 கிலோவாக இருந்தார். ஒரு மணி நேரம் வெந்நீர் குளியல், ஒரு மணி நேரம் டிரட் மில்லில் தொடர் ஓட்டம் 15 நிமிடங்கள் வீதம் ஐந்து முறை ஓட்ட பயிற்சி என இரவு முழுவதும் கடுமையான பயிற்சி வழங்கப்பட்டதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.