அமெரிக்கா ஜூன், 3
உலகக்கோப்பை T20 தொடர் அமெரிக்காவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் யுஎஸ்ஏ, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை ஆறு மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் நபீபியா, ஓமன் அணிகள் மோதுகின்றன. இதேபோல இரவு 8 மணிக்கு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதுகின்றன.