அமெரிக்கா ஜூன், 7
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. பதினோராவது லீக்கில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய அமெரிக்க அணியும் மூன்று விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் அமெரிக்க அணி முதல் இடத்தை பிடித்தது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.