சென்னை ஏப்ரல், 23
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளன. உள்ளூரில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றுள்ளது. சென்னை அணியின் வெற்றி இன்று தொடருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.