கோவை ஏப்ரல், 17
நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் நல்ல முடிவை எடுத்தால் நாளை நமதாகும். இல்லையெனில் அடுத்த தேர்தல் வருமா? என்பது சந்தேகம்தான்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் திராவிட மாடலை இந்தியாவே பின்பற்ற வேண்டும் என்றார்.