மதுரை ஏப்ரல், 17
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரச்சாரத்தில் பேசிய அவர் INDIA கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும், பிரதமர் வேட்பாளர் யார் எனவும் அரைவேக்காடு அண்ணாமலை கேட்கிறார். அரசியல் சாசனப்படி, INDIA கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பர் என்றார்.