புதுக்கோட்டை ஏப்ரல், 16
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலில் புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.