மதுரை ஏப்ரல், 17
தண்டனைகள் குறைவாக இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2019, 2021 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் எண்ணிக்கை எத்தனை? தண்டனை வழங்கப்பட்டவை எத்தனை? என சாரமாறி கேள்வி எழுப்பிய நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.