கரூர் ஏப்ரல், 15
I.N.D.I.A கூட்டணியின் தலைவர்கள் பாதிப்பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் உள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் எதிரணியில் அப்படி ஒருவர் இல்லை. திமுகவும் காங்கிரசும் பிரிவினையை விதைக்கின்றன தேசத்தைப் பற்றி சிந்திக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.