கீழக்கரை ஏப்ரல், 15
ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குடி கிராம மக்களின் நீர் ஆதாரமான கண்மாயில் ஸ்ரீமதி சால்ட் பிரைவேட் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இதனால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்ட ஆனைக்குடி கிராம மக்கள் சம்பந்தபட்ட உப்பு கம்பெனியை அகற்றக்கோரி அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டியும் கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனைக்குடி கிராம மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை நினைவூட்டுகிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்