கீழக்கரை ஏப்ரல், 16
நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக,முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்களும் இன்னபிற சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை.
இந்நிலையில் அபுபக்கர் சித்திக் என்னும் சுயேட்சை வேட்பாளர் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தாம் செய்த சமூக நல பணிகளை பட்டியலிட்டு அதனை பூமாலையை போன்று வடிவமைத்து கையில் ஏந்தியவாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று(15.04.2024) இரவு 9 மணியளவில் பீஸா பேக்கரி சந்திப்பில் மைக் பிரச்சாரம் மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இவருக்கு மீனவர் மக்கள் முன்னணி கட்சியும் தேசிய மக்கள் சக்தி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்