கீழக்கரை ஏப்ரல், 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் குறிக்கோள் போதை இல்லா சமூகத்தை உருவாக்குவது என்பதே.
போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதும் போதை பொருள் குறித்த எச்சரிக்கை பிரச்சாரம் மேற்கொள்வதும் இந்த சங்கத்தின் நோக்கம் என கூறுகின்றனர்.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று(14.04.2024)இரவு 7.30 மணிக்கு கடற்கரை நியூ பீச் பார்க் வளாகத்தில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE உமர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில்அனைத்து சமுதாய கூட்டமைப்பின் செயலாளர் ஷேக் உசேன், KLK வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, நகர்மன்ற துணை தலைவர் ஹமீதுசுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்தீக், டல்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொறுப்பாளர் பஷீர், நியூ பீச் பார்க் கமிட்டி நிர்வாகி சமுதாயக்குரல் நிஸ்டார் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுநல சங்க நிர்வாகிகள் மங்குஸ்தான்(எ)இப்றாகீம், ஹமீது உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்