சென்னை ஏப்ரல், 13
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு ஜூன் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும் ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ம் தேதி வரை வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.