ராமேஸ்வரம் ஏப்ரல், 13
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உள்ளிட்ட மீன்பிடி இடங்களில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடித்தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமம் இன்றி நடத்த குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 ரூபாய் விரைவில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.