கீழக்கரை ஏப்ரல், 13
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தெற்கு மாவட்ட ததஜ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 07.04.2024 அன்று அதிகாலை தொழுகை முடிந்த நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் உள்பட மூன்று பேரை பத்து பேர் கொண்ட ரவுடி கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி படுகாயமடைய செய்து தலைமறைவாகி விட்டனர்.
இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும்,குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்கிட கோரியும், பெருகிவரும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க கோரியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையால் மாணவர்கள்,இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வரும் அவலங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கவலையால் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்